நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோதிகாவுக்கும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் என்கிற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக திருமணம் தொடர்ந்து தள்ளி போய்க் கொண்டே இருந்தது. மேலும் கேரளாவை சேர்ந்த மணமகனுக்கு தமிழகம் வர இ-பாஸ் கிடைக்காததால் தமிழக கேரள எல்லையில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.