இந்தியா

இந்தியாவுக்கு மீண்டும் தலைவலி பறக்கும் ட்ரோன்கள், ராக்கெட் லாஞ்சர்ஸ்...அடுத்த பூதாகாரம் இறங்கிய CRPF

தந்தி டிவி

இந்தியாவுக்கு மீண்டும் பெரும் தலைவலி

பறக்கும் ட்ரோன்கள், ராக்கெட் லாஞ்சர்ஸ்

வெடிக்கும் பூதாகாரம்...இறங்கிய CRPF

நாட்டை அதிரச் செய்திருந்த மணிப்பூர் இப்போது மீண்டும் கலவரத்தால் கதிகலங்கி போயிருக்கிறது... என்ன நடந்தது இப்போது...?

இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது...துப்பாக்கியால் மோதிக்கொண்ட போராட்டக்காரர்கள், தற்போது டிரோன் மூலம் வெடி குண்டுகளை வீசி மோதி வருவது மாநிலத்தை அதிரச் செய்திருக்கிறது...

மாநிலத்தின் சில மாவட்ட மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டிருப்பதும், அங்குள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதும் மணிப்பூரை பதற்ற நிலையில் வைத்திருக்கிறது.

ட்ரோன்களை அழிக்கும் சாதனங்கள், அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் ட்ரோன் அழிப்பு துப்பாக்கிகளுடன், மத்திய ரிசர்வ் படையினரும் மணிப்பூரில் குவிக்கப்பட்டிருப்பது கடந்த கால கசப்பை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது...

மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி பழங்குடியின மக்களுக்கிடையே, கடந்தாண்டு நடந்த மோதலில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது..

இடையே சில மாதங்கள் இந்த மோதல் போக்கு தணிந்து, இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த மணிப்பூரில், தற்போது மீண்டும் வன்முறை பூதாகரமாக கிளம்பி, 10க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிக்கு இரையாகி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

இதனிடையே, வன்முறையை கைவிட வலியுறுத்தி மணிப்பூரை சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் பேரணி மூலம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்..

இந்நிலையில், ட்ரோன்கள், ஆளில்லா விமானம் மற்றும் ராக்கெட் லாஞ்சர்ஸ்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தி இருப்பது தெரியவர, இந்த சாதனங்கள் எல்லாம் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்