இந்தியா

கர்வம் கொண்ட அமெரிக்கா, சீனாவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! - சைலெண்டாக ஒரு மாஸ்டர் ஸ்கெட்ச்!

தந்தி டிவி

9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்க உள்ள இஸ்ரோவின் மங்கள்யான்-2

விண்கலம் குறித்து வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நிலவுக்கு மட்டுமல்ல செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும்... என்பது எலான் மஸ்க்கின் ஆசை மட்டுமல்ல... பல உலக நாடுகளின் கனவு அது...

அதனால் தான்... செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது... அங்கு தண்ணீர் கிடைப்பதற்கு என்ன வழி? என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

இன்னும் ஒரு படி மேலே சென்று, பூமியிலேயே செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை விண்வெளி வீரர்கள் பெற ஏற்பாடு செய்துள்ளது. 2030களில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பதே நாசாவின் கனவு திட்டம்.

அப்படி இருக்கையில் முதல் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக செவ்வாய் கிரக பயணத்தில் பணிபுரிந்து வரும் இஸ்ரோ... நாசாவின் பெர்ஸ்வரன்ஸ் ரோவரைப் போலவே ரோவர் மற்றும் ஹெலிகாப்டரை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு, ஒரு சூப்பர்சோனிக் பாராசூட் மற்றும் செவ்வாய் கிரகத்தில் ரோவரை நிலைநிறுத்துவதற்கான ஸ்கை-கிரேனை உருவாக்கும் பணியும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் பணியானது, கடந்த 1960களிலேயே தொடங்கி விட்டாலும், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடு என்ற பெருமையை பெற்றது, இந்தியா தான்.

கடந்த 2014ம் ஆண்டு செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் மிகக் குறைந்த செலவில் விண்கலத்தை நிலைநிறுத்திய நான்காவது நாடு என்ற சாதனையை படைத்து, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருந்தது, இஸ்ரோ.

இதுவரை செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா , சீனா ஆகிய இரண்டே இரண்டு நாடுகள் மட்டுமே தரையிறங்கியுள்ளன.

அந்த வரிசையில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய 3வது நாடு என்ற பெருமையை தன்வசமாக்க ஆவல் கொண்டு பணியாற்றி வருகிறது, இந்தியா.

ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்படும் விண்கலம் ஆராய்ச்சிக்காக 4 முக்கிய கருவிகளை எடுத்துச் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விண்கலம் LVM3 ராக்கெட்டில் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு