கர்நாடக தலைமைச் செயலகமான விதான சவுதா கட்டிடத்தை, ஏ.ஐ. மூலம் குண்டுவெடித்து தகர்ப்பது போன்ற போலி வீடியோ வெளியிட்ட பீகார் தொழிலாளி கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் பிளம்பராக வேலை பார்த்து வரும் அலி என்ற 25 வயது இளைஞர், இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
இதைக் கண்டறிந்த பெங்களூரு காவல்துறையினர், டிஜிட்டல் தடயங்கள் மூலம் அவரைக் கைது செய்தனர்.
வீடியோ வெளியிட்டதன் பின்னணி மற்றும் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#karnataka #AI #secretaryoffice #thanthitv