இந்தியா

ப்ளூடூத் மூலம் காப்பி - அப்படியே அதே பாணியில் முக்கிய தேர்வில் ஆள் மாறாட்டம்

தந்தி டிவி

திருவனந்தபுரத்தில், வசூல்ராஜா பட பாணியில் இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்களுக்கான தேர்வில் செல்போன் ப்ளூடூத் மூலம் காப்பியடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தொழில்நுட்ப பிரிவு பணியாளருக்கான தேர்வு நடைபெற்றது. இதில், காட்டன்ஹில், செயின்ட் மேரிஸ் பள்ளியில் தேர்வு எழுதிய இரண்டு பேர் செல்போன் ப்ளூடூத் மூலம் காப்பி அடித்ததை கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் மறைத்து வைத்திருந்த செல்போன் மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் சுனில் குமார், சுமித் குமார் என்ற இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததும் தெரியவந்தது. இருவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்