இந்தியா

வீட்டிலேயே கங்கையை உருவாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பெண்

தந்தி டிவி

மகாகும்பமேளாவிற்கு செல்ல இயலாததால் கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒரு தனித்துவமான செயலை மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 57 வயதான கௌரி, பிரயாக்ராஜ்ஜில் நடக்கும் மகா கும்பமேளாவிற்கு செல்ல போதிய பொருளாதார வசதி இல்லாததால் தனது வீட்டின் கொல்லைபுரத்தில் கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். டிசம்பர் மாதம் தொடங்கி தினமும் 6-8 மணி நேரம் உழைத்து, பிப்ரவரி 15 அன்று கிணற்றை தோண்டி முடித்துள்ள அவர், இந்த 40 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்த மாத இறுதியில் மகா சிவராத்திரி தினத்தன்று அதில் கெளரி நீராட திட்டமிட்டுள்ள நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்