இந்தியா

திருமணம் செய்ய வலியுறுத்தி பெண்ணை வீட்டுக்குள் சிறைப்பிடித்து வைத்த இளைஞர்

மத்திய பிரதேசத்தில் ஒரு தலை காதலால், இளைஞரால் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்ணை 4 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் மீட்டனர்.

தந்தி டிவி
போபாலை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது வீட்டுக்குள் பெண் ஒருவரை சிறைப்பிடித்து வைத்திருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று பிற்பகலில் போலீசார் அங்கு சென்றபோது, வீட்டுக்குள் இருந்த இளைஞர், அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அந்த பெண்ணை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். ஒரு முத்திரைத் தாளை கொண்டு வந்து எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் எனவும் அந்த இளைஞர் கூறினார். சுமார் 4 மணி நேரம் நீடித்த இழுப்பறிக்கு பிறகு, போலீசார் அதிரடியாக நுழைந்து அந்த பெண்ணை மீட்டனர். ரத்த காயங்களுடன் கிடந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்