மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து பாஜக சார்பில் ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அக்கட்சி சார்பில் சிவராஜ் சிங் சவுகான், மத்திய பிரதேச முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற பின்னர் போபாலில் நடைபெற்ற கொரோனா தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், இன்று முதல் போபால், ஜபல்பூர் ஆகிய நகரங்களில் ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவித்தார். இதனிடையே, மத்திய பிரதேச சட்டப்பேரவையில், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.