இந்தியா

MadhyaPradesh | கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கட்டு போல் சரிந்த 3 மாடி கட்டடம்-பதைபதைக்கும் காட்சி

கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கட்டு போல் சரிந்த 3 மாடி கட்டடம்-பதைபதைக்கும் காட்சி

thanthitv

கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கட்டு போல் சரிந்த 3 மாடி கட்டடம் - பதைபதைக்கும் பகீர் காட்சி

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினில் உள்ள தாபா சாலையில் மூன்று மாடி கட்டடம், கண்ணிமைக்கும் நேரத்தில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்துள்ளது... மத்திய பிரதேச மாநிலத்தில் திடீரென இடிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடம். மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜெயினில் உள்ள தாபா சாலையில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த வீட்டிற்குள் இருந்தவர்கள் அனைவரும் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே மாநகராட்சியின் சார்பில் சாலை விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு வரும் நிலையில் பலவீனமான அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது சாலை விரிவாக்க பணி நடைபெறும் போது அந்த பகுதியில் உள்ள மிகவும் பழமையான மற்றும் பலவீனமான வீடுகளை அடையாளம் கண்டு அந்த வீட்டில் இருந்தவர்களை ஏற்கனவே வெளியேற்றியதாகவும் இடிந்து விழுந்த வீட்டிற்கு அருகே சாலை விரிவாக்கத்திற்கான பள்ளத்தை தோண்டி கொண்டிருக்கும்போது திடீரென பலவீனமான அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்தவர்களை ஏற்கனவே வெளியேற்றியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

Jana nayagan Release | ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு? - ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட்

Chennai Voting | சென்னையில் 3 நாட்கள் வாக்குப்பதிவு - வெளியான தகவல்

School Teacher | அரசு பள்ளிக்கு உள்ளேயே 6th டீச்சர் வெட்டி படுகொலை - உடனே நேரில் விரைந்த DSP

TVK Vijay Campaign | தள்ளிவைத்த விஜய்.. பரபரப்பு தகவல்

Chennai Raid | அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் பரபரப்பு ரெய்டு