இந்தியா

ஸ்ட்ரெச்சர் தள்ள லஞ்சம் கேட்ட மருத்துவமனை ஊழியர் - தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற 6 வயது பேரன்

மருத்துவமனையில், முதியவரின் ஸ்டெச்சரை தள்ள மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தள்ளிச்சென்ற சம்பவம் உத்தபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
டியோரிய மாவட்டத்தில், மருத்துவமனை ஒன்றில், உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்த நிலையில், முதியவரை பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவமனை பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் 30 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதியவரின் மகள் ஸ்ட்ரெச்சரை இழுக்க, பேரன் பின்னால் இருந்து தள்ளி செல்கின்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமான பரவியதை அடுத்து பணம் கேட்ட உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை