இந்தியா

மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு... பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர் அமளி

மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு... பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர் அமளி

தந்தி டிவி

மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு... பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர் அமளி

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பெகசாஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் சேவையை இந்தியாவில் பயன்படுத்தி வருவதாக வெளியான தகவல் தவறானது எனவும், நாடாளுமன்றம் கூடுவதற்கு ஒரு நாள் முன்னதாக இது போன்ற செய்திகள் வெளியாவது, இந்திய ஜனநாயகத்தை களங்கப்படுத்த நடக்கும் முயற்சி எனக் குறிப்பிட்டார்.தொடர்ந்து அமளி நீடித்ததால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முதலில் அடுத்தடுத்தும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி