இந்தியா

சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்கள் சரிவு

சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வங்கி கடன் 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது.

தந்தி டிவி

* தொழில்துறைக்கான மொத்த வங்கி கடன்களில், 2015இல் 5.9 சதவீதம் சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* நடப்பாண்டு அக்டோபர் மாதம் இது 4.5 சதவீதமாக குறைந்திருக்கிறது.

* நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் அக்டோபர் வரை சிறு, குறு நிறுவனங்களுக்கு மொத்தம் 3.64 லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

* சென்ற நிதியாண்டை விட இது 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் குறைவாகும்.

* ஆனால் அனைத்து வகை தொழில்துறைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வங்கி கடன்கள் 26.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

* வீட்டு கடன்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன்களின் அளவு அதிகரித்தது தான் இதற்கு காரணம்.

* கடந்த ஏழு மாதங்களில் அளிக்கப்பட்ட வங்கி கடன்களில் 47 சதவீதம் இந்த இரு துறைகளுக்கு மட்டும் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்