டார்ஜிலிங்கில் விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளைஞர்
#Accident #Darjeeling #thanthitv
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய இளைஞர் நூழிலையில் உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது
மேற்கு வங்க மாநிலம் குர்சியோங் வியூ பாயிண்ட் அருகே மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கை நோக்கிச் சறுக்கிச் சென்றது. எனினும், சாலையோரத்தில் இருந்த பாதுகாப்புச் சுவர் மற்றும் தடுப்பு வேலி பைக்கையும் ஓட்டுநரையும் தடுத்து நிறுத்தியதால் அந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார்.