ஹரியானாவில் இருந்து ஆந்திராவுக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் இருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்ட 965 மதுபாட்டில்களை, கனம்பள்ளியில் வைத்து போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,7 பேரையும் சிறையிலடைத்தனர்.