வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில் திரிபுரா முதன்மை வனப்பாதுகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வி.எச்.பி. வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், திரிபுராவின் முதன்மை வனப்பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.