வாடிக்கையாளர் பணம் ரூ.19.96 லட்சம் மோசடி - உ.பி.யில் அஞ்சலக ஊழியர் கைது
உத்தரபிரதேச மாநிலத்தில், வாடிக்கையாளர் பணம் 19 லட்சத்து 96 ஆயிரத்தை கையாடல் செய்த அஞ்சலக ஊழியரை போலீசார் கைது செய்தனர். சேமிப்பு தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான தொகைகளை, அவர் கையாடல் செய்துள்ளனர். நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டது குறித்து புகாரின் பேரில், அஞ்சலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.