இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவம் - சிபிஐ போட்ட பிளான் | Kolkata | CBI | Doctor

தந்தி டிவி

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில், சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆர்.கே. கர் மருத்துவக் கல்லூரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சியால்தா நீதிமன்றம் அதற்கான அனுமதியை கடந்த 22-ஆம் வழங்கியது. பரப்பான சூழலுக்கு மத்தியில், சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் புலன் விசாரணை நடத்த காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay | Ministers | நாளையே புதிய அமைச்சர்கள் பதவியேற்பு? - ட்விஸ்ட்டுடன் லிஸ்ட்

BREAKING || தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்கு பின் புது வரலாறு

CM Vijay | TN Police | Chennai |வேட்டையில் இறங்கிய TN போலீஸ்.. சென்னையில் ஒரேநாளில் 133ரவுடிகள் கைது

TN Govt | Medical Strike | தமிழ்நாடு முழுவதும் நடந்த மெடிக்கல் முழு அடைப்பு போராட்டம் நிறைவு

BREAKING || CM VIJAY | முதல்வரானதும் விஜய் போட்ட முதல் கையெழுத்து - இன்று நடந்த அதிரடி மாற்றம்