கேரளா வெள்ள பாதிப்பிற்காக, முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 21 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கி உள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா தலைமை செயலகத்தில்
முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை நீதா அம்பானி வழங்கினார். மேலும் முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.