கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தி கலைத்தனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெபி மேத்தர் தலைமையில், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து
லோக் பவனுக்கு பேரணியாக சென்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் தண்ணீர் பீரங்கி மூலம் நடவடிக்கை மேற்கொண்டனர்.