கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக டி.ஒய்.எஃப்.ஐ. அமைப்பினர், டீக்கடையை தொடங்கியுள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கடையில், "டீ குடிக்கலாம்... பலகாரம் சாப்பிடலாம்... பணம் வயநாட்டிற்கு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த கடையை மலையாள நடிகர்களான கொஞ்சி கிருஷ்ணனும், உண்ணி ராஜும் துவக்கி வைத்தனர்.