இந்தியா

பிஞ்சுகளின் உடல்கள்... காண்போர் இதயத்தை கிழிக்கும் கொடூரம் - நிற்காமல் எரியும் தகனமேடை

தந்தி டிவி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் மற்றும் தலையில்லாத உடல்களை தகனம் செய்து வருவதாக, பணியாளர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்கள், மயானங்களில் விடிய விடிய எரியூட்டப்பட்டு வருகின்றன.

இதில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக உடல்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்,

இதுவரை 37 உடல்களை தகனம் செய்துள்ளதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அதில் குழந்தைகளின் உடல்கள் வந்து கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார்.

மயானத்திற்கு வரும் உடல்கள் மிகக் கொடூரமாக இருப்பதாகவும், உறவினர்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கை, கால் போன்ற உடல் பாகங்கள் மற்றும் தலையில்லாத உடல்களை தாங்கள் தகனம் செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு