இந்தியா

கேரளாவில் திருநம்பி - திருநங்கை திருமணம் - உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த ஹைதி சாதியா என்ற சிறுவன் பத்து வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து திருநங்கையானார்.

தந்தி டிவி
கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த ஹைதி சாதியா என்ற சிறுவன் பத்து வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து திருநங்கையானார். இதனால் குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு 18 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, பெங்களூர், கோவை, டெல்லி, மும்பை என பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு கேரளா திரும்பிய சாதியா, திருநம்பியான திருவனந்தபுரத்தை சேர்ந்த அதர்வ் மோகன் என்பவரை சந்தித்தார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில், தற்போது திருமணத்தில் இணைந்தனர். இந்த திருமணத்திற்கு வந்து, உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு இதே போல் இஷான் - சூரியா எனும் திருநங்கை - திருநம்பி ஜோடி முதன்முதலாக திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஹைதி சாதியா - அதர்வ் மோகன் ஜோடியின் இரண்டாவது நிகழ்வாக அமைந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி