கேரள மாநிலம் கொல்லம் அருகே, வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் வீட்டின் மீது மோதிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. புள்ளிக்காடு சாலையில் காரும், சரக்கு வாகனமும் கண் இமைக்கும் நேரத்தில் மோதியதில், நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் சுவரை நோக்கி பாய்ந்தது. அப்போது அந்த வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடினார். சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் அவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.