இந்தியா

கேரளாவில் 6 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஜோளி உள்ளிட்ட 3 பேரின் காவல் நீட்டிப்பு

கேரளாவில் 6 பேரைக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜோளி உட்பட 3 பேரின் காவலை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஜோளி, அவருக்கு உதவிய பிரஜூகுமார், மேத்யூ ஆகியோர் தாமரசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, கொலை செய்வதற்காக ஜோளியிடம் பிரஜூகுமார் கொடுத்த சயனைடு கோவையிலிருந்து வாங்கப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை கோவைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்கக் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களது காவலை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்