#keralapolice #ganja கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் வெளியங்கோட்டில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பதுக்கியதாக 23 வயது முகம்மது அசார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.