கேரள மாநிலம் மூணாறில், அணைகள் நிரம்பியதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக, மூணாறில் முக்கிய அணைக்கட்டுகளாக கருதப்படும் மாட்டுப்பட்டி மற்றும் குண்டளை அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் படகு சவாரி துவங்கியுள்ளது. அணையின் அழகை ரசிக்கவும், படகு சவாரி செய்யவும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூணாறில் குவிந்து வருகின்றனர்.