மூணாறு ராஜமலை பெட்டி முடி மண் சரிவில் சிக்கி இது வரை 61 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 9 பேரை தேடும் பணியில் ரேடார் கருவி உதவியுடன் தேடுதல் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற தேடுதலில் ஆற்றில் அஸ்வந்த் ராஜ், அனந்தா செல்வம் உட்பட மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் மண்ணில் புதைந்தவர்களை ரேடார் உதவியுடன் தேடும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து நான்கு பேர் கொண்ட ஒரு குழு வந்துள்ளது.