திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர் குண்டுராவ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்து, தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது. இதனை அந்த பெண் தனது வீட்டில் தெரிவித்ததை அடுத்து, இளம் பெண்ணின் தந்தை குண்டுராவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குண்டுராவ், இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகே சென்று, அவரது தந்தையின் அறை ஜன்னல் வழியாக விஷப் பாம்பை வீசியுள்ளார். விஷப் பாம்பு அறைக்குள் கிடந்ததைக் கண்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர், அதை அங்கிருந்து அகற்றினர். இது தொடர்பாக விசாரித்ததில் குண்டுராவின் நாச வேலை என தெரியவந்ததை அடுத்து, இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.