கேரளாவில், மலப்புரம் மாவட்டம், கோட்டக்குந்நு பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், சரத் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த மூவர் மண்ணுக்குள் சிக்கினர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மண்சரிவுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களாக மண்ணை அகற்றிய நிலையில், சரத்தின் மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனின் சடலம் மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மண்ணை தோண்டி உடல்களை வெளியே எடுத்தபோது சரத்தின் மனைவி தனது மகனின் கையை இறுக பிடித்தவாறு சடலமாக கிடந்த காட்சி அனைவரது மனதையும் உருக செய்யும் விதமாக இருந்தது. இச்சம்பவத்தில் சரத் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார்.