இந்தியா

கேரளாவே தேடிய அந்த அதிர்ஷ்டசாலி... ஒரேநாளில் ரூ 25 கோடி; தட்டிதூக்கிய மெக்கானிக் - திருவோணம் மேஜிக்

தந்தி டிவி

கேரள அரசின் சார்பில் திருவோண பண்டிகையை ஒட்டி நடந்த லாட்டரி சீட்டு சிறப்பு குலுக்கலில் வெற்றி பெற்ற மகா அதிர்ஷ்டசாலி கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

இந்த ஆண்டு சிறப்பு குலுக்கல் நேற்று நடைபெற்றது. முதல் பரிசாக 25 கோடியில் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வயநாட்டில் உள்ள ஏஜென்சி மூலம் விற்பனையான லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது... எனினும் நேற்று யார் அந்த மகா அதிஷ்டசாலி என கண்டறிய முடியாத நிலையில், ஒட்டுமொத்த கேரள மக்களும் அவரை அறிந்து கொள்ள ஆர்வமாகக் காத்திருந்தனர்... இந்நிலையில் கர்நாடக மாநிலம் பாண்டியா புரத்தை சேர்ந்த அல்தாப் என்ற மெக்கானிக் தான் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார்... இவர் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்த நிலையில் தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை