சமையலறைக்குள் 8அடி நீள ராஜநாகம் - பெண் அதிர்ச்சி
கேரள மாநிலம் கண்ணூரில் சமையலறைக்குள் புகுந்த சுமார் எட்டு அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யங்குத்து பகுதியை சேர்ந்த பெண் தனது சமையலறையில் வழக்கம் போல் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது சமையலறைக்குள் வித்தியாசமான சத்தம் கேட்டது. சோதனையிட்டதில், சுமார் எட்டு அடி நீள ராஜநாகம் இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ராஜநாகத்தை லாவகமாக பிடித்து சென்றனர்.