இந்தியா

"விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்" - கேரள ஆளுநர் சதாசிவம்

விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுவதாகவும், நீதிபதி பணி ஓய்வுக்கு பின்னர் விவசாயம் செய்வதற்காக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கேரளா மீது கொண்ட அன்பால் ஆளுநர் பதவியை ஏற்று கொண்டதாகவும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுவதாகவும், நீதிபதி பணி ஓய்வுக்கு பின்னர் விவசாயம் செய்வதற்காக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கேரளா மீது கொண்ட அன்பால் ஆளுநர் பதவியை ஏற்று கொண்டதாகவும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் காசர்கோட்டில் செயல்பட்டு வரும் மத்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற விவசாய கண்டுபிடிப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். விவசாய துறையில் உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள நமது விவசாயிகளை வலிமை உடையவர்களாக உயர்த்த வேண்டும் என்றும், புதிய நவீன யுக்திகளை விவசாயத் துறையில் உருவாக்கி, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதோடு உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள தேவை உள்ளதாகவும் கேரள ஆளுநர் சதாசிவம் சுட்டிக்காட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்