கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்று மாநாட்டை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தொடங்கி வைத்து பேச தொடங்கினார். அப்போது, மாணவர் பிரதிநிதிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் கோபமடைந்த ஆளுநர், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் வெளியேற்றப்படுவீர்கள் என்று எச்சரித்தார். இருப்பினும் மாணவர்களின் முழக்கம் தொடர்ந்ததால் அவர் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.