இந்தியா

கேரளா வெள்ளத்துக்கு ஒருமாத சம்பளம் : மாநிலங்களவை, துணை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் முடிவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யும் வகையில், குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் மற்றும் மாநிலங்களவை செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யும் வகையில், குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் மற்றும் மாநிலங்களவை செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் குடியரசு துணை தலைவர் செயலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்