இந்தியா

கேரள வெள்ளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய வீரர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர் ஒருவருக்கு மக்களின் பாராட்டுகள் குவிகின்றன.

தந்தி டிவி

தண்ணீரில் மூழ்கும் பெரியாற்றுப் பாலம் வழியாக தேசிய மீட்புப் படைவீரர் கன்னையாகுமார், ஒரு குழந்தையைக் காப்பாற்றி அக்கரை சேர்ந்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் வெள்ளம் பாலத்தையே மூழ்கடித்துவிட்டது.

அவர் குடைபிடித்த நிலையில், குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு விரைவாக நடந்து செல்லும் படம் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த கன்னையாகுமார்,அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப் படை முகாமில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாடு, மேற்குவங்கம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளம்பாதித்த பகுதிகளுக்குச் சென்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை