இந்தியா

இறுதிக் கட்ட பிரசாரத்தின் போது கட்சியினரிடையே மோதல்.. கல்வீச்சு.. பதற்றம்..

கேரளாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணி உடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

தந்தி டிவி
கேரளாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணி உடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது. முன்னதாக இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது, காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே நிலவிய மோதல் மற்றும் கல்வீச்சு சம்பவம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. திருவனந்தபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் ஊர்வலத்தை கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேப்போல, பத்தணந்திட்டையில் பாஜக வேட்பாளரின் வாகனத்தை கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். திருவல்லா பகுதியில் கம்யூனிஸ்ட் - பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. வடகரை தொகுதியில் நடைபெற்ற மோதலையொட்டி, வாக்கெடுப்பு நாளான 23ம் தேதி மாலை 6 மணி முதல் 24ம் தேதி இரவு 10 மணி வரை அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்