வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது அலுவலகம் சென்று வழக்கம்போல் ஈடுபட்டார். அவரை குஜராத் அமைச்சர் கவுசிக் பாய் படேல் சந்தித்து நிவாரண உதவியாக 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதே போல் இந்திய விமானப்படை சார்பில் 20 கோடி ரூபாயும், அதானி குழுமம் சார்பில் 25 கோடி ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.
நடிகர் லாரன்ஸ் 1 கோடி நிதி
நடிகர் ராகவா லாரன்ஸ் 1 கோடி ரூபாயை நிவாரண உதவியாக வழங்கினார்.