இந்தியா

அரபு நாடு மற்றும் கேரளா முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்

அரபு நாடு மற்றும் கேரளா முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் ரமலான் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சந்திரசேகரன் நாயர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ரம்ஜான் - காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை

திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜானை பண்டிகையையொட்டி இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் மற்றும் ஜிம்மா பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

ரம்ஜான்-தென்காசியில் சிறப்பு தொழுகை

நெல்லை மாவட்டம் தென்காசியில் மஸ்ஜிதூர் ரகுமான் ஜிமா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. இந்த தொழுகை தென்காசி முஸ்தபியா நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.நேற்று கேரள மாநில கோழி கோடு பகுதியிலும்,தமிழகத்தில் குளச்சல் பகுதியிலும் பிறை தென்பட்டதால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதாக தெரிவித்தனர்.

சூரத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

குஜராத் மாநிலம் சூரத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், ஒரவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அரபு நாடு மற்றும் கேரளா முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்

ரம்ஜான் பண்டிகையையொட்டி துபாய், பக்ரைன் ரியாத் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள பள்ளிவாசலில் மூஸ்லீம் பெருமக்கள் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். இதில் சகோதர துவத்தை வெளிபடுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு