இந்தியா

செஞ்சது கொலை என தெரியாமலே செய்த தாய், மகன், மகள்- குடும்பத்தோடு விலங்கு மாட்டி இழுத்து சென்ற போலீஸ்

தந்தி டிவி

இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குன் உட்லண்ட்ஸ் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் கொல்லமத் பாபு- பிரேமா தம்பதிக்கு வினோத், பிபின் பாபு ஆகிய 2 மகன்களும், பினிதா என்ற மகளும் உள்ளனர். கடந்த 5 தேதி மாலை பிபின் பாபு தற்கொலை செய்து கொண்டதாக பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால், பிபின் பாபுவின் உடலில் காயங்கள் இருந்ததால், கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக, பிபின் பாபு குடும்பத்தினரிடம் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்திய பிறகு, அவரை கொலை செய்ததை குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

சம்பவத்தன்று, சகோதரியின் குழந்தைக்கு பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்தபோது, மது போதையில் வந்து பிபின் பாபு தகராறு செய்துள்ளார். அப்போது, பிபின் பாபு தனது தாயாரை தாக்க முயன்றபோது, சகோதரி பினிதாவும், சகோதரர் வினோத்தும் தாக்கியதில் பிபின் பாபு நினைவிழந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தாயார், மகள், மகன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்