கேரளாவில் கார் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் படுகாயமடைந்தார். கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க, இடதுபுறம் திருப்பிய போது ஆட்டோ மீது கார் உரசியது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளன.