இந்தியா

அரசையே ஆடவிட்ட பிரபல நடிகர் மீதான பாலியல் புகார்- ஆதாரத்தோடு அணுகுண்டையே வீசி தீ பிடிக்க விட்ட நடிகை

தந்தி டிவி

அரசையே ஆட விட்ட பிரபல நடிகர் மீதான பாலியல் புகார் - ஆதாரத்தோடு அணுகுண்டையே வீசி தீ பிடிக்க விட்ட நடிகை

கேரள அரசின் மீது நம்பிக்கை இழந்து போயிருப்பதாக கூறி, நடிகை ஒருவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை பேசு பொருளாகி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

கேரளாவில்... பிரபல நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்...

இந்த விவகாரத்தில், முகேஷ்க்கு எர்ணாகுளம் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது...

இந்நிலையில், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, கேரள அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு தீர்மானித்திருக்கிறது....

ஆனால், முகேஷ் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக இருப்பதால்.. மேல்முறையீடு செய்ய வேண்டாம் என விசாரணை குழுவுக்கு கேரள அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது...

இதனால் கொந்தளித்திருக்கும் நடிகை, இது குறித்து அறிக்கை வெளியிட்டு விசாரணை குழுவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்...

கேரள அரசின் மீது நம்பிக்கை இழந்து போயிருப்பதாக தெரிவித்த அவர், நடிகர்கள் முகேஷ்க்கும், இடவெலா பாபுவுக்கும் வழங்கப்பட்ட முன் ஜாமினை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தை அனுகப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்...

இதனிடையே, தன்னையும், தன் குடும்பத்தாரையும் அவர்களின் தனி மனித உரிமையை பாதிக்கும் வகையில், போலீசார் நடந்து கொள்வதாகவும் குற்றம் சுமத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’