Keralam Accident | மோதிய அந்த வேகத்தில் வண்டியோடு பறந்த நபர் - கைக்குழந்தையை தூக்கி ஓடிய இன்னொருவர்
கேரளாவில் ஸ்கூட்டர் நின்றுக்ககொண்டிருந்த வேனில் மோதி விபத்து . குழந்தை உட்பட மூவர் காயம். கேரள மாநிலம் கண்ணூரில் அதிவேகமாக வந்த ஸ்கூட்டர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது; இதில் சரக்கு வாகனத்தில் இருந்த இரு பெண்களில் ஒருவரும், அவருடன் இருந்த கைக்குழந்தையும் கண்ணாடி உடைந்து காயமடைந்தனர், மேலும் ஸ்கூட்டரில் வந்த நபரும் படுகாயமடைந்தார், இதையடுத்து மூவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன