இந்தியா

கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய, மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

சீனா சென்று திரும்பிய திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது சில தினங்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவிக்கு திருச்சூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனா சென்று திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான 2 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் மட்டும் மொத்தம் ஆயிரத்து 793 பேர் மருத்துவ பாதுகாப்பு மற்றும் சோதனையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS