இந்தியா

Kaveri | Karnataka | Tamilnadu | தண்ணீர் திறக்க முடியாது என்ற கர்நாடகா - ஒரே போடாக போட்ட அதிகாரிகள்

தண்ணீர் திறக்க முடியாது என்ற கர்நாடகா - ஒரே போடாக போட்ட அதிகாரிகள்

thanthitv

Kaveri | Karnataka | Tamilnadu | தண்ணீர் திறக்க முடியாது என்ற கர்நாடகா - ஒரே போடாக போட்ட அதிகாரிகள் தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 3,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர். அப்போது, காவிரியில் இருந்து 29-ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் நடைபெற்றது. அப்போது, தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசின் வாதத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், தமிழகத்திற்கு காவிரியில் நான்கரை டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டனர். அதன்படி, விநாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க உள்ளது.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு