இந்தியா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகளை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

தந்தி டிவி

இது தொடர்பான மனுக்களை, கடந்த 3 நாட்களாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே. கவுல், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. இன்றைய விசாரணையில், மனுதாரர்கள் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள், ஜம்மு- காஷ்மீரின் அரசியல் சாசனத்தை திருத்தும் அதிகாரம் இந்திய அரசியல் சாசனத்துக்கு இல்லை என வாதிட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு, 370-வது பிரிவின் நோக்கம் குறித்தும், காஷ்மீர் குறித்த தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க கூடாது என வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு