காஷ்மீர் மாநில எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் எல்லை பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் வீரமரணமடைந்த செங்கோட்டை வீரர் சந்திரசேகரின் உடல் இன்று இரவு 7.15 மணிக்கு அவரது சொந்த ஊர் வந்தது. அங்கு உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செய்தனர். அரசு மரியாதையுடன் இரவு 8.30 மணிக்கு உடல் அடக்கம் நடைபெற்றது.