இந்தியா

காசிபூரில் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : காவலர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் போலீசார் வந்த வாகனம் மீது நிஸ்கத் கட்சியினர் நடத்திய கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில், 45 வயதான காவலர் சுரேந்திர வாட்ஸ் உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் போலீசார் வந்த வாகனம் மீது நிஸ்கத் கட்சியினர் நடத்திய கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில், 45 வயதான காவலர் சுரேந்திர வாட்ஸ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதமர் மோடியின் உத்தரபிரதேச வருகையை கண்டித்து நிஸ்கத் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து 23 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே, உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்