இந்தியா

கர்நாடகாவில் 16 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - 4 பேரை கைது செய்த போலீஸ்

கர்நாடகாவில் பள்ளிக்கு சென்ற சிறுமியை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து சாலையில் வீசி சென்ற பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண் நண்பருடன் வெளியில் சென்ற இளம்பெண்ணை கும்பல் ஒன்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மங்களூரு அருகே பண்ட்வால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஹம்ட்டாடி கிராமத்தில் பள்ளிக்கு சென்ற 16 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

மறைவிடத்தில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை சாலையில் வீசி சென்றுள்ளது.

பின்னர் சுயநினைவு திரும்பியதும் மாணவி நடந்ததை தெரிவிக்கவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாணவி காரிலிருந்து வீசப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TN Govt | CM Vijay | CMRL | MRTS |அப்படியே மாறப்போகும் சென்னை - தமிழகஅரசுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

Mekedatu | CM Vijay | மாறிய ரிப்போர்ட்.. முடிவோடு இறங்கிய கர்நாடகா.. தமிழகத்தை கொதிக்க வைக்கும் மூவ்

Breaking | TN Medical Selection | Counselling | MBBS BDS மாணவர் சேர்க்கை - வெளியான முக்கிய அறிவிப்பு

BJP | AmitShah | Chennai | அமித்ஷா வருகை.. பாதுகாப்பு ரேடாருக்குள் சென்னை..!

Karnataka | Tamilnadu | பேரதிர்ச்சி.. தமிழர்கள் போலி என்கவுன்ட்டரா..? உயிர்தப்பியர் பகீர் வீடியோ