இந்தியா

கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு : இருதரப்பு மோதலால் விஷம் கலந்திருக்க வாய்ப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது

தந்தி டிவி
சாம்ராஜ் மாவட்டம், கெனூரில் உள்ள அம்மன் கோயில் திருவிழா தொடர்பாக இருபிரிவினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது .. இந்நிலையில், கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரசாதமாக வழங்கப்பட்ட தக்காளி சாதத்தை சாப்பிட்ட, 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70-க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், மகேஷ், சிஞ்சி ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு