கர்நாடக மாநிலம் மங்களூருவில், பள்ளி ஒன்றில் நடந்த விளையாட்டு தினவிழாவில், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஸ்ரீராம வித்யா கேந்திரா உயர்நிலை பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்தியா வரைபடம் போன்ற வடிவில் அமர்ந்திருந்த மாணவர்கள், பாபர் மசூதி போன்று நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்தெறிய, நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. அப்போது, மாணவர்கள் இந்து தேசம் வாழ்க என்று முழக்க மிட்டனர். இந்த நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.